தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சி 14-வது வர்டு தச்சமொழி நாடார் தெருவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுகாதார வளாகம் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் திறந்து வெளியில் இயற்கை உபாைத கழிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அந்த சுகாதார வளாகத்தை பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.