சுல்தான்பேட்டை பகுதியில் தென்னை நார் தொழிற்சாலைகளில் மஞ்சி தயாரிக்க வாகனத்தில் உரிமட்டைகள் எடுத்து செல்லப்படுகிறது. அப்போது வாகனத்தில் இருந்து பல மட்டைகள் ரோட்டில் சிதறி விழுகிறது. இதன் மீது இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை ஏற்றும்போது நிலைதடுமாறி விழுந்து காயம் அடையும் நிலை தொடர்கிறது. எனவே இதனை தடுக்க உரிமட்டைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் தார்பாய் போட்டு மூடி கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.