நெய்க்காரபட்டி அருகே அம்மாபட்டி ஏரிக்கரையையொட்டி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பவுர்ணமி, அமாவாசை தினத்தன்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவிலுக்கு செல்லும் சாலையின் குறுக்கே கரடுமுரடான பாறை ஓரம் பாசன வாய்க்கால் மதகு உள்ளதால் மழை காலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் திரும்புகின்றனர். மேலும் பாசன மதகில் இருந்து கோவிலுக்கு செல்லும் ஏரிக்கரை மண் சாலை பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே பக்தர்கள் நலன் கருதி பாசன மதகு உள்ள இடத்தில் பாலம் அமைக்கவும், ஏரிக்கரை மண் சாலையை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.