தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் அண்ணாமலைஅள்ளி ஊராட்சியில் ஜம்பூத் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல பாலம் மற்றும் சாலை அமைக்கப்பட்டது. தற்போது பெய்த மழையில் பாலம் அடித்துசெல்லப்பட்டது. இதனால் ஜம்பூத், மூசன்கோட்டாய் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் புதிதாக பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேசன், அண்ணாமலைஅள்ளி, தர்மபுரி.