ரிஷிவந்தியம் ஒன்றியம் மரூர் புதூர் கிராமத்தையொட்டி அக்ராவரம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி முழுவதையும் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் மழை காலங்களில் ஏரியை ஒட்டியுள்ள வயல்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியின் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீரை சேமிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.