ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையில் உள்ள கடற்கரை பகுதியில் தினந்தோறும் ஏராளமானோர் வந்து குளித்து செல்கின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கூடும் இப்பகுதியில் அவர்களுக்கென உடை மாற்றும் அறை அமைக்கப்பட்டது. தற்போது இந்த அறை பயன்பாடின்றி பூட்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் பொதுவெளியில் உடை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?