புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-29 12:11 GMT

கோத்தகிரி அருகே கூக்கல்தொரையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஆங்காங்கே புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் புகலிடமாக விளங்குகிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே ஆஸ்பத்திரியில் வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்