மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சி தெற்கு தெரு 16வது வார்டு பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் அமைக்க பள்ளமானது தோண்டப்பட்டது. இந்நிலையில் மழையினால் அங்குள்ள மின்கம்பமானது தோண்டிய குழியில் சாய்ந்துள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சதுடனே சாலையை கடக்கும் நிலை உள்ளது. எனவே தோண்டிய குழியில் விரைவாக வாருகால் அமைத்து சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.