கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் இருந்து சிவாயம், வளையப்பட்டி, பணிக்கம்பட்டி, குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையில் சிவாயத்தில் இருந்து வளையப்பட்டி பகுதிக்கு இடையே 2 சிறிய பாலங்கள் சாலையின் நடுவே கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டப்பட்டு வரும் ஒரு பாலம் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் உள்ளன. இதில் மற்றொரு பாலம் பணிகள் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே பாலம் கட்டுமான பணிகளை காலதாமதம் இன்றி கட்டி முடிப்பதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.