சேர்வைக்காரன்மடம் ஊராட்சி தங்கம்மாள்புரத்தில் இருந்து பேய்குளம் செல்லும் பாதையில் ஸ்ரீவைகுண்டம் வடிகால் பாசனம் பாயும் குளம் உள்ளது. இந்த குளத்தில் சிலர் இரவு நேரங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டிச் செல்கிறார்கள். மேலும் சில சமயங்களில் தீவைத்தும் செல்கிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுகள் குளத்து தண்ணீரில் கலப்பதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.