ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து காடுதுலா விலக்கில் இருந்து கன்னியாகுமரி-தூத்துக்குடி நெடுஞ்சாலைக்கு செல்லும் ரோட்டின் இருபுறமும் சில இடங்களில் முட்செடிகள் அடர்ந்து நிற்கிறது. இது இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. ஆகவே, இந்த முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?