நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-07-28 11:48 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கீழபொட்டல்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு நூலகம் கொரோனா காலத்தில் மூடப்பட்ட நிலையில் இன்னும் திறக்கவில்லை. இதனால் இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள் தங்களது பொதுஅறிவை வளர்க்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே தற்காலிகமாக மூடிய நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வரவேண்டும்.

பொன்ராஜ், கீழபொட்டல்பட்டி.
 

மேலும் செய்திகள்