பூட்டி கிடக்கும் கழிவறை

Update: 2022-07-28 11:06 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாசில்தார் அலுவலகத்துக்கு தினந்தோறும் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கார்டு, சான்றிதழ், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்து மனு அளித்து விட்டு செல்கின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறை பூட்டியே கிடப்பதால், நீண்ட தூரத்தில் இருந்து வரும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சிரமப்படுகின்றனர். பூட்டிய கழிவறையை திறந்ததால் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் செய்திகள்