திருப்பூர் அனுப்பர்பாளையம் சாஸ்திரி வீதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி சுற்றுச் சுவரையொட்டி கட்டிட கழிவுகள் குவிந்து கிடக்கின்றது. அதே இடத்தில் தண்ணீர் குழாயும் உள்ளது. தண்ணீரும் கசிவு ஏற்பட்டு சேறும், சகதியுமாக மாறி விட்டது. இந்த சாலையில் பாதாள சாக்கடை மற்றும் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி மூடிய பிறகும், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் சாக்கடை தூர்வாரி சாலையோரத்தில் கழிவுகளை போட்டு உள்ளனர். எனவே இவற்றை சரி செய்ய வேண்டும்.