அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூா் பஸ் நிறுத்தம் அருகே பள்ளிக்கூடத்தையொட்டி உள்ள சாலைகளின் சந்திப்பில் பிளக்ஸ் பேனா்கள் கட்டப்பட்டும். கற்கள் குவிந்தும் போடப்பட்டுள்ளது. செடி. கொடிகள் வளா்ந்து புதா் மண்டியும் காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று வர சிரமப்படுகிறாா்கள். உடனே கல் குவியலை அகற்றவும். புதா்களை அகற்றவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.