சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் புத்தூர் அக்ரஹாரத்தை அடுத்த பெரியார் நகரில் சாலை, கழிவுநீர் கால்வாய், மின்சாரம், பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி மனு அளித்தும் பலன் இல்லை. பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், பெரியார் நகர், சேலம்.