வழி பிறக்குமா?

Update: 2022-05-11 15:12 GMT
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பெரிய விப்பேடு கிராமத்தில் 150-க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறப்பு நிகழ்ந்தால் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல 2 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. இறந்த சடலங்களை எடுத்து செல்லும் வழி பாதையானது முட்புதர்களும், கரடு முரடாகவும் இருக்கிறது. மேலும் ஒரு சிறிய ஓடை உள்ளதால் மழை மற்றும் பேரிடர் காலங்களில் சடலங்களை தண்ணீரில் மிதந்துக் கொண்டு தான் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. சுடுகாட்டுக்கு செல்ல ஒரு பாதை இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு விடை கிடைக்குமா?

மேலும் செய்திகள்