அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி- முத்துவாஞ்சேரி வரை நெடுஞ்சாலை துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்தனர். பின்னர் சாலை வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் ரூ.87 லட்சத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் வி.கைகாட்டி-நாகமங்கலம் இடையே இரும்பு தடுப்புகள் சேதமடைந்து சாலை ஓரமாக கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.