ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையத்தில் ராமேசுவரம் சேது உள்ளிட்ட சில ரெயில்கள் நின்று செல்வதில்லை. இதனால் மண்டபத்திலிருந்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு செல்வோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த ரெயில் நிலையம் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். எனவே இந்த ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.