சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். எனவே மருத்துவமனைக்கு கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.