சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் மையப்பகுதியாகவும், எண்ணற்ற சிறு, குறு வணிக நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்பகுதியிலிருந்து ஏராளமான பயணிகள் தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் ரெயில் நிலையம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அதிக செலவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் நடுத்தர, ஏழை குடும்பத்தினர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் ரெயில் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.