மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரில் உள்ள சாலையின் குறுக்கே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சிறுபாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் தற்போது உடைந்துள்ளது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சிறு பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.