நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-26 17:49 GMT

சேலம் மாநகராட்சி பொன்னம்மாபேட்டை கேட் அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிழற்கூடம் சேதமடைந்துள்ளதால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அந்த நிழற்கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?

-ராஜன், பொன்னம்மாபேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்