ரோந்து வாகனம் இயக்கப்படுமா?

Update: 2022-07-26 17:41 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருந்து அடிவார பகுதிக்கு மலைவாழ் மக்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய அதிகளவில் வருகின்றனர். மேலும் கொல்லிமலையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளும் அடிவார பாதை வழியாக சென்று வருகின்றனர். இந்தநிலையில் மலைப்பாதையில் விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களி்ன் பாதுகாப்பு கருதி மலைப்பகுதியில் ரோந்து வாகனம் இயக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

-ஜெயா, கொல்லிமலை, நாமக்கல்.

மேலும் செய்திகள்