நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்திபலகானூர் கிராமத்தையொட்டி கோழிப்பண்ணை உள்ளது. கோழிப்பண்ணையில் இருந்து வரும் ஈக்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் படையெடுப்பதுடன், உணவு, தண்ணீர் ஆகியவற்றில் விழுகின்றன. இதனால் இந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி கோழிப்பண்ணையில் இருந்து வரும் ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
-முனியப்ப தேவேந்திரன், அத்திபலகானூர், நாமக்கல்.