தெருவிளக்கு வேண்டும்

Update: 2022-07-26 14:46 GMT

தூத்துக்குடியில் இருந்து தட்டப்பாறை விலக்கு வழியாக புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் பழைய பாலம் ஒன்று உள்ளது. அங்கிருந்து ஊருக்குள் செல்லும் வரை சாலையோரம் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள். ஆகவே, அங்கு தெருவிளக்கு அமைப்பதுடன், வேக கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைத்தால் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும் செய்திகள்