செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் இது வெயில் காலம் என்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களும், முதியவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மக்களின் நிலை கருதி நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.