சுகாதாரமற்ற தின்பண்டங்கள்..?
திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் முதல் அனைத்து மண்டலத்திற்குட்பட்ட பல வார்டுகளில் தள்ளுவண்டி கடைகள் மற்றும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பேக்கரி மற்றும் உணவு பொருள் கடைகளில் தின்பண்டங்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. தற்போது மண் சாலையில் உள்ள தூசி மற்றும் துகள்கள் அனைத்தும் தின்பண்டங்கள் மீது படிந்து விடுகிறது. ஆகவே தின்பண்டங்களை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள் மற்றும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை நோய்த்தொற்று இன்றி பாதுகாப்பாக இருக்க அரசு சுகாதாரத்துறை மூலம் கடைகளை ஆய்வு செய்து கடைகாரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழிமுறைகள் வழங்க வேண்டும்.
ந.தெய்வராஜ், 15 வேலம்பாளையம்.
94423 72611