செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேட் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது வெயில் காலம் என்பதால் பஸ் எற வரும் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் கோரிக்கையை ஏற்று பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை மீண்டும் புதுபித்து தர வேண்டும்.