சேதமடைந்த குடிநீர்த் தொட்டி

Update: 2023-09-20 13:34 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் திம்மையன் பேட்டை கிராமத்தில் சின்னத்தெருவில் உள்ள குடிநீர்த் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் இந்த குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டு சுமர் 40 வருடங்களுக்கும் மேலாகிறது. இந்த நிலையில் குடிநீர்த் தொட்டியின் அடித்தளத்தின் கம்பிகள் துருப்பிடித்தும், தூண்கள் உடைந்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த தொட்டியின் அருகில் பல குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர்த் தொட்டியை அமைத்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்