பதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா அணவயல் பகுதியில் மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தில் படந்து வளர்ந்து இருந்த செடி, கொடிகளை அகற்றினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.