சங்கராபுரம் அருகே பாச்சேரி கிராமத்தில் உள்ள பொதுக்கழிப்பறை கட்டிடம் புதர்மண்டி கிடக்கிறது. கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கழிப்பறை கட்டிடத்தை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.