எருமப்பட்டி பஸ் நிலையம் அருகே தபால் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லாததால் காலை 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பணிகள் நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே வந்து டோக்கன் வாங்கிய நபர்களுக்கு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இதனால் தபால் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே அஞ்சல் துறை சார்பில் ஊழியரை நியமித்து காலை முதல் மாலை வரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், எருமப்பட்டி.