நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பெரிய மாரியம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில் சமீபகாலமாக தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக நடந்து மற்றும் இருசக்கரவ வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பெரிய மாரியம்மன் கோவில் வழியாக செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி தெருநாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம், சேந்தமங்கலம்