வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட மாடத்தட்டுவிளையில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையம் முறையாக செயல்படாமல் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மருத்துவர், செவிலியர்கள் நியமித்து சீராக செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோ, மாடத்தட்டுவிளை.