தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2023-09-17 07:56 GMT

மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் மண்டபம் அருகில் உள்ள சாலையின் குறுக்கே செல்லும் கால்வாயின் மீது ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தின் பக்கவாட்டில் விபத்து தடுப்புச்சுவர்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்