சேலம் மரவனேரி கோர்ட் ரோடு பகுதியில் சலாம் காலனி, காந்திநகர் பகுதியில் உள்ள 6 தெருக்கள் பெயர்கள் இல்லாமல் உள்ளது. ஸ்மார்ட் சிட்டியின் மூலம் சேலத்தில் அனைத்து தெருக்களுக்கும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. மரவனேரி பகுதியில் மட்டும் நீண்ட நாட்களாக பெயர் பலகை வைக்கப்படவில்லை. இங்கு புதிதாக வரும் தபால்காரர் மற்றும் பொதுமக்கள் தெரு பெயர் தெரியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெயர் பலகை அமைக்க வேண்டும்.
-சுரேஷ், சேலம்.