தர்மபுரி நகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை நாய்கள் துரத்துவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் தெருநாய்களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே மாவட்ட விளையாட்டு அரங்குகள் தெருநாய்கள் நுழைவதை தடுக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கந்தசாமி, எம்.ஜி.ஆர். நகர், தர்மபுரி.