சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி மேட்டூர் முதல் மாதேஸ்வரன் மலை செல்லும் நெடுஞ்சாலையில் கொளத்தூர் சோதனை சாவடியை அடுத்து 100 மீட்டர் தொலைவில் சாலை வளைவில் பாதுகாப்பு வேலி அருகில் பள்ளம் உள்ளது. வாகன ஓட்டிகள் இதன் அருகில் செல்லும்போது எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை சரி செய்ய வேண்டும்.
-சி.சென்ன கிருஷ்ணன், சிங்கிரிபட்டி, சேலம்.