விழுப்புரம் அருகே பனமலைப்பேட்டை, வெள்ளையாம்பட்டு, பனமலை, அனந்தபுரம், சி.என்.பாளையம் ஆகிய கிராமங்களில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.