கரூர் மாவட்டம் பாலத்துறை, புகழூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கறிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் சேலம் -கரூர் நெடுஞ்சாலையில் புகழூர் அருகே தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.