ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் பட்டுப்போன நிலையில் ஆபத்தான ராட்சத மரம் ஒன்று நிற்கிறது. சாலையோரம் நிற்கும் அந்த மரம் சூறாவளி காற்று மற்றும் கனமழை பெய்யும்போது, எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாயம் நிலவுகிறது. அப்போது அந்த வழியாக செல்பவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழும் முன், அந்த மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.