பெங்களூரு ஜெயநகர் 5-வது பிளாக் 36-வது கிராஸ் முதல் 38-வது கிராஸ் வரை தெரு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே சாலையில் இருபுறங்களிலும் அறிவியல்பூர்வமற்ற முறையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் வீணாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.