பெங்களூரு எலகங்கா நேருநகர் பகுதியில் மாநகராட்சி குப்பை லாரிகள் சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் பாதசாரிகள் நடுரோட்டில் நடந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் குப்பை லாரிகளை சாலையோரம் நிறுத்தாமல் வேறு பகுதிகளில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.