பெங்களூரு அரகெேர சிக்னல் பகுதியில் பாதசாரிகளின் வசதிக்காக சிறிய சாக்கடை கால்வாய்க்கு மேலே நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நடைபாதையில் உள்ள கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் சாக்கடை கால்வாயில் விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. இதனால், அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பு பெயர்ந்து கிடக்கும் கற்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்