விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ள ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் போதுமான அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.