புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-09-10 12:51 GMT

கரூர் மாவட்டம், புஞ்சைபுகழூர் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பூங்கா பூட்டப்பட்டு இருந்தது. இந்த பூங்காவை திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பூங்காவை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்