திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி 12-வது வார்டு அரிஜன தெரு எம்.ஜி.ஆர். காலனியில் பழமையான ஓட்டுவில்லை வீடுகளில் மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்களின் வீடிற்கு அருகே ஒரு பழமையான அரச மரம் ஒன்று இருந்தது. இந்த அரசமரம் காற்று அடிக்கும்போது வீடுகளின் மீது விழுவது போன்று உரசியதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அரச மரத்தை அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.