நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அருகே உள்ள வாய்க்காலில் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி செல்லக்கூடிய நிலை உள்ளது. தேங்கி கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?