திட்டக்குடி தாலுகா பூவனூர் ஊராட்சி ஒ.கீரனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியை தனிநபர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் ஏரியில் போதுமான அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிப்படுகிறது. ஆகவே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.